1. Home
  2. தமிழ்நாடு

பெண் முதல்வரை கட்டிப்பிடிப்பேன் என்று மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கொரோனா!

பெண் முதல்வரை கட்டிப்பிடிப்பேன் என்று மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கொரோனா!


கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்று பேசி சர்ச்சையில் சிக்கிய பாஜக நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா, எங்கள் தொண்டர்கள் கொரோனாவை விட ஒரு பெரிய எதிரியுடன், அதாவது மம்தா பானர்ஜியுடன் போராடுகிறார்கள் என்று கூறினார்.

நான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால், முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன் என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பேச்சு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கோபத்தை உண்டாக்கியது. இதுபற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அனுபம் ஹஸ்ரா, கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like