1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN: மற்றுமொரு பிரபல நடிகருக்கு கொரோனா !!

#JUST IN: மற்றுமொரு பிரபல நடிகருக்கு கொரோனா !!


பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25–ம் தேதி கிறிற்துமஸ் தினத்தன்று ஒரு விருந்து நிகழ்ச்சியை ராம் சரண் ஏற்பாடு செய்திருந்தார். அதில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், வருண் தேஜ், அல்லு சிரிஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராம்சரண் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சில மணி நேரத்தில் நடிகர் வருண் தேஜ்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்...


நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் எந்த அறிகுறியும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். விரைவில் குணமாகி உங்களை சீக்கிரம் சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார்

வருண் தேஜ் விரைவில் குணமடைய ரசிகர்களும், பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் வருண் தேஜ் கடந்த சில நாட்களுக்கு முன் தான், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த உருவாக்கப்பட்ட F2 படத்தின் இரண்டாம் பாகமான F3 படப்பிடிப்பில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Trending News

Latest News

You May Like