1. Home
  2. தமிழ்நாடு

மெக்சிகோவை குறிவைத்த கொரோனா.. உலக அளவில் உயிரிழப்பு குறித்த புள்ளிவிவரம் !

மெக்சிகோவை குறிவைத்த கொரோனா.. உலக அளவில் உயிரிழப்பு குறித்த புள்ளிவிவரம் !


சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பரவி மனித குலத்திற்கு பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது.  

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
 
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.தற்போதைய நிலவரப்படி, 91,88,362 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மெக்சிகோவை குறிவைத்த கொரோனா.. உலக அளவில் உயிரிழப்பு குறித்த புள்ளிவிவரம் !

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 37,89,923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57,888 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 49 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4,74,339 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரசால் மிகவும் பாதிக்கப்பட்டு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்காவும், பிரேசிலும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. 

மெக்சிகோவை குறிவைத்த கொரோனா.. உலக அளவில் உயிரிழப்பு குறித்த புள்ளிவிவரம் !

இந்நிலையில், மெக்சிகோ தற்போது கொரோனாவின் அடுத்த இலக்காக மாறி வருகிறது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 1,044 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மெக்சிகோவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

  1. அமெரிக்கா - 1,22,610
  2. பிரேசில் - 51,407
  3. இங்கிலாந்து - 42,647
  4. ஸ்பெயின் - 28,324
  5. இத்தாலி - 34,657
  6. மெக்சிகோ - 22,584
  7. பிரான்ஸ் - 29,663
  8. இந்தியா -  14,015

newstm.in 

Trending News

Latest News

You May Like