1. Home
  2. தமிழ்நாடு

போலீஸார் மத்தியில் மீண்டும் பரவத் தொடங்கும் கொரோனா!

போலீஸார் மத்தியில் மீண்டும் பரவத் தொடங்கும் கொரோனா!


பெங்களூருவில் கொரோனா 2ஆவது அலை தீவிரமாக உள்ள நிலையில், காவல்துறையினர் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் மற்றவர்கள் பீதியில் உள்ளனர்.

கர்நாடகத்தில் கொரோனா 2ஆவது அலை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், முன்களப்பணியாளர்களான காவல்துறையினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு பெங்களூருவில் போலீசார் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பலர் குணமடைந்து வீடு திரும்பினாலும் உயிரிழப்பும் கணிசமாக இருந்தது. இந்நிலையில் இந்த முறை கொரோனா 2ஆவது அலை போலீசாரை குறி வைக்க தொடங்கியுள்ளது.

சந்திரா லே அவுட் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 53 போலீசாருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 3 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடன் பணியாற்றியவர்களை தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காவல்துறையினர் மத்தியில் கொரோனா எட்டிப்பார்க்க தொடங்கியுள்ளதால் எப்படியும் ஒருவழி செய்துவிடும் என்று போலீஸார் கலக்கத்தில் உள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like