1. Home
  2. தமிழ்நாடு

நியூஸ் பேப்பர் மூலம் கொரோனா பரவுகிறதா !! நியூஸ் பேப்பர் விநியோகத்திற்கு தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு.

நியூஸ் பேப்பர் மூலம் கொரோனா பரவுகிறதா !! நியூஸ் பேப்பர் விநியோகத்திற்கு தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. மத்திய , மாநில அரசுகள் எவ்வளவு தான் தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் , கொரோனா குறையவில்லை. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

மும்பையில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளை வீடு வீடாக விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மாநில அரசு இன்று புதிய ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டதுடன், ஏப்ரல் 20 முதல் ஓரளவு மீண்டும் தொடங்கப்படும் சேவைகள் குறித்த விவரங்களையும் அளித்தது.

முன்னதாக செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவுவதாக வதந்திகள் பரவிய நிலையில் , அதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என செய்தித்தாள்கள் விநியோகத்திற்கு தடை விதிக்க மறுக்கப்பட்டது.

எனினும் தற்போது மஹாராஷ்டிராவில் முதல் , முறையாக ஏப்ரல் 20 முதல் அச்சு ஊடகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளை வீடு வீடாக விநியோகிப்பது தடைசெய்யப்படும் என பரவலின் அளவைக் கருத்தில் கொண்டு மாநில அரசாங்கம் கூறியுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like