மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. இங்கிலாந்தில் மேலும் ஒருமாதம் முழு ஊரடங்கு அறிவிப்பு !

சீனாவில் இருந்து தோன்றி இன்று உலகம் முழுவரும் பரவிய கொரானா வைரஸ் நாள்தோறும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகள் பொருளாதார பலத்தை இழந்துள்ளன.
பல்வேறு நாடுகள், நிறுவனங்கள் கொரோனா மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இரவு, பகலாக உள்ளனர். ஒருசில மருந்துகள் இறுதிக்கட்டத்தை எட்டி ஆறுதல் அளிக்கின்றன. இதனால் தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இரண்டாவது அலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஒரு மாத காலத்துக்கு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவெடுத்தார். இது குறித்து அதிகாரிகலுடன் ஆலோசித்தார்.
அப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் அந்நாட்டின் அரசால் அமைக்கப்பட்ட மருத்துவக்குழுவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. மக்கள் மீண்டும் கொரோனா அச்சமின்றி நடமாடுவதாகவும், இரண்டாவது அலை மிகத்தீவிரமாகஇருக்கும் எனவும் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இங்கிலாந்தில் டிசம்பர் 2ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
newstm.in