கொரோனா பரவல் அதிகரிப்பு.. பள்ளிகளுக்கு நாளை முதல்.. அரசு அதிரடி உத்தரவு..!

கொரோனா பரவல் அதிகரிப்பு.. பள்ளிகளுக்கு நாளை முதல்.. அரசு அதிரடி உத்தரவு..!

கொரோனா பரவல் அதிகரிப்பு.. பள்ளிகளுக்கு நாளை முதல்.. அரசு அதிரடி உத்தரவு..!
X

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து நேரடி வகுப்புகளில் பங்கேற்று வந்தனர்.

இதற்கிடையில், அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 31 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 652 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாளை முதல் 31-ம் தேதி வரை, 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து தனியார், அரசு பள்ளிகளும் மூடப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இன்று நடைபெறும் மகா சங்கராந்தி நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை.

Next Story
Share it