தமிழகத்தை விட கர்நாடகத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகரிப்பு!!

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று மட்டும் கர்நாடகாவில் 9,464 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 130 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,808 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 12,545 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது வரை 98,326 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.