ஏ.டி.எம் மூலம் பரவிய கொரோனா !! 3 பேர் பாதிப்பு

ஏ.டி.எம் மூலம் பரவிய கொரோனா !! 3 பேர் பாதிப்பு

ஏ.டி.எம் மூலம் பரவிய கொரோனா !! 3 பேர் பாதிப்பு
X

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,077 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 718 ஆகவும் உள்ளதாக மத்திய தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் பரோடாவில், பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டிருந்த 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 3 பேருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சக வீரர்கள் உட்பட 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்களுக்கு கொரோனா எப்படிப் பரவியிருக்கும் என்பது தொடர்பாக நடந்த கான்டக்ட் ஹிஸ்டரியில், 3 பேரும் ஒரே நாளில் ஒரு ஏ.டி.எம்மை உபயோகித்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், அந்த ஏடிஎம் சீல் செய்யப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஏடிஎம்மை பயன்படுத்திய பொதுமக்களும் தாங்களாக முன்வந்து அரசுக்குத் தகவல் தெரிவித்து, தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு பரோடா நகர அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆகவே ஏ.டி.எம் பயன்படுத்துபவர்கள் உஷாராக இருக்க வேண்டும். வங்கிகளுக்கு செல்லும் போது கூட முக கவசம் , கையுறை அணிந்து செல்லுங்கள் என்று வலியுறுத்தப்படுகிறது.

Newstm.in

Next Story
Share it