1. Home
  2. தமிழ்நாடு

நடிகை தமன்னாவுக்கு கொரோனா பாசிட்டிவ்!

நடிகை தமன்னாவுக்கு கொரோனா பாசிட்டிவ்!


பிரபல நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் ஏற்பட்டு ஏழு மாதங்களாகிவிட்டது. ஆனாலும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

அந்த வகையில், தற்போது நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் ஷூட்டிங்கில் இருந்த அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தமன்னா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like