1. Home
  2. தமிழ்நாடு

உச்சம் தொடும் கொரோனா.. தமிழக அரசு தந்த அப்டேட்..!

1

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல கோடி பேரை பலி கொண்டது. இந்தியாவிலும் லட்சக்கணக்கானோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டதால் 2022-ம் ஆண்டுடன் இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்தது.

இந்நிலையில், சிங்கப்பூரில் திடீரென கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் 26000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த மக்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணிகளை அந்நாட்டு சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும், முகக்கவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில், சிங்கப்பூர் - தமிழ்நாடு இடையே நேரடி விமானப் போக்குவரத்து அதிக அளவில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சிங்கப்பூரில் இருந்து ஏராளமானோர் தமிழ்நாட்டிற்கும், தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சிங்கப்பூருக்கும் தினமும் சென்று வருகின்றனர். இதனால் தமிழகத்திலும் கொரோனா பரவக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், "சிங்கப்பூரில் கேபி 2 வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காணப்படுகிறது. இது ஒமைக்ரான் வகையை சேர்ந்த வைரஸ் ஆகும். இந்த வகை வைரஸால் தீவிர பாதிப்பு இல்லை. அதனால் தமிழக மக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. பொது இடங்களுக்கு போகும் போது முகக்கவசம் அணிந்து செல்லுதல், அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடித்தாலே போதும்" என அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like