வேறு குடும்பத்திடம் மாற்றி கொடுக்கப்பட்ட கொரோனா நோயாளியின் சடலம்!

வேறு குடும்பத்திடம் மாற்றி கொடுக்கப்பட்ட கொரோனா நோயாளியின் சடலம்!

வேறு குடும்பத்திடம் மாற்றி கொடுக்கப்பட்ட கொரோனா நோயாளியின் சடலம்!
X

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை அவரது சொந்த உறவினர்களிடம் அல்லாமல் மற்றொரு குடும்பத்திடம் தவறுதலாகக் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10 ஆம் தேதி கொரோனாவால் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் பிணவறையில் பார்த்த போது, அந்த நபரின் சடலம் அங்கு இல்லை. இதுகுறித்து அந்த நபரின் உறவினர்கள் மருத்துவமனை அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அதிகாரிகள் கொடுத்த விளக்கங்கள் சரியாக இல்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர். பின்னர் தான், அந்த நபரின் சடலம் தவறுதலாக மற்றொரு குடும்பத்திடம் கொடுக்கப்பட்டது என்றும், அதனை அவர்கள் அடக்கம் செய்துவிட்டார்கள் என்பதும் தெரியவந்தது. 


இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த வாரமும் இதே மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. இதேபோல், இறந்தவர் ஒருவரின் சடலம் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. மயானம் வரை சென்ற பின்னர் சடலம் மாறியுள்ளது தெரியவந்தது. பின்னர், அந்தச் சடலம் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது.

newstm.in

Next Story
Share it