சென்னையில் கொரோனா நோயாளி, அறிகுறி உள்ள இளைஞர் தப்பியோட்டம்!

சென்னையில் கொரோனா நோயாளி, அறிகுறி உள்ள இளைஞர் தப்பியோட்டம்!

சென்னையில் கொரோனா நோயாளி, அறிகுறி உள்ள இளைஞர் தப்பியோட்டம்!
X

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடர் கொரோனா சிகிச்சையில் இருந்த முதியவர் மற்றும் ஓமந்தூரார் பன்நோக்கு அரசு மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனைக்கு வந்த இளைஞர் ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா வார்டில் இருந்த அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 
அதே போல் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த 26 வயது இளைஞர்  கொரோனா அறிகுறியுடன் ஓமந்தூரார் பன்நோக்கு அரசு மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனைக்கு வந்தார்.

அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இளைஞர் மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது. இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

newstm.in

Next Story
Share it