தலைமைச் செயலகத்தை புரட்டிப் போட்ட கொரோனா : ஊழியர்கள் கடும் அதிர்ச்சி

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் கடந்த 3 நாட்களில் 56 பேருக்கு கொரோனா நோய் பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொடிய கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு கடந்த மே மாதம் முதல் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது. சென்னையில் செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தில் 37 துறைகள் உள்ளன. இதில், ஆறு ஆயிரத்துக்கும் அதிகமான ஆண், பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அரசு உத்தரவுப்படி தலைமைச் செயலகம் முதன் முதலில் 33 சதவீதம் ஊழியர்களுடன் செயல்பட்டது. பின்னர் 50 சதவீதம் ஊழியர்களுடனும், இதனைத் தொடர்ந்து, 100 சதவீதம் ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் 56 பேருக்கு கொரோனா நோய் பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்றவைகளை முறையாக கடைபிடித்தாலே கொரோனா பரவலை தடுத்துவிட முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
newstm.in