SPBக்கு கொரோனா நெகட்டிவ்! மருத்துவமனை அறிக்கை! அதிர்ச்சியில் ரசிகர்கள்

உடல் நிலை தேறி வந்த நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்.
கடந்த மாதம் 5ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை, எம்ஜிஎம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி., சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் மரணமடைந்தார்.
உடல் நிலை நன்கு தேறி வந்த நிலையில், திடீரென நேற்று எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது எஸ்.பி.பிக்கு கொரோனா நெகட்டிவ் என்கிற அறிக்கை ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சமூக வலைத்தளங்களில், கொரோனா நெகட்டிவ் என்றால், ஏன் எங்கள் பாடும் நிலாவைக் காப்பாற்றவில்லை என்று ரசிகர்கள் தங்களது சோகத்தைத் தெரிவித்து வருகின்றனர். இத்தனைக்கும் நன்கு ஆரோக்கியமாக, லேசான கொரோனா தொற்றுடன் தான் மருத்துவமனைக்குச் செல்வதாக எஸ்.பி.பி வீடியோ வெளியிட்டிருந்தார். பல கோடி பேரின் பிரார்த்தனை வீணானதே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.