கொரோனாவால் பறிபோகும் வேலை… இளைஞர்களின் தற்கொலை அதிகரிப்பு!

கொரோனா பரவல் காரணமாக பலரும் வேலை இழந்து வருவதால் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயது பட்டதாரி இளைஞரான முத்துச்செல்வன், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அவரது வேலை பறிபோனது. இதனால் கடந்த ஆறு மாதங்களாக நிரந்தர வேலை மற்றும் வருமானம் இன்றி அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.
இந்நிலையில் மன அழுத்தத்தின் காரணமாக அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மதுரை கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்தே மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனர். ஒரு வேளை உணவு கூட இல்லாமல் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் வேலை கிடைக்காமல் இருப்பதுதான்.
இந்நிலையில் தற்போது இளைஞர்களின் வேலை பறிபோவதால் பலரும் தவறான முடிவை எடுக்கின்றனர். ஆனால் இது நிரந்தரமல்ல எல்லாம் விரைவில் மாறும் என மன நிலையுடன் சூழலை சமாளிக்க வேண்டும் என்று மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
newstm.in