1. Home
  2. தமிழ்நாடு

எவரெஸ்ட் சிகரம் போல் உயரும் கொரோனா தொற்று..!!

எவரெஸ்ட் சிகரம் போல் உயரும் கொரோனா தொற்று..!!


தமிழ்நாட்டில் இன்று புதிதாக 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 27,87,391 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 5,098 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,880 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 5,82,553 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவிலிருந்து 1,525 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,10,288 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 40,260 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 1,38,745 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 5,74,37,457 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,843 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது,

“உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை எவரெஸ்ட் சிகரம் போல் உயர்ந்து கொண்டு இருக்கிறது. உலகளவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக நேற்று 26.06 லட்சம் பேருக்கு ஒரு நாள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு நேர பொது முடக்கத்திற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எவரெஸ்ட் சிகரம் போல் உயரும் கொரோனா தொற்று..!!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் இல்லை. ஒவ்வொரு பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வரே தொடங்கி வைத்தார். 35 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த கண்டறியப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள தகுதியுடைய நபர்களுக்கு ஜனவரி 10 தேதி தடுப்பூசி செலுத்தப்படும்.

33 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியிருந்தது. அதில் 21 லட்சம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் டோஸ் 92 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 71 சதவீதம் பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like