கொரோனா தொற்றால் எம்.பி. உயிரிழப்பு!

கொரோனா தொற்றால் எம்.பி. உயிரிழப்பு!

கொரோனா தொற்றால் எம்.பி. உயிரிழப்பு!
X

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த திருப்பதி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பதி தொகுதி எம்.பியான பல்லி துர்கா பிரசாத் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 64.

இவரின் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி அவரது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பல்லி துர்கா பிரசாத் அவர்களின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியது.அவர் ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர்.ஆந்திராவின் வளர்ச்சியில் அவரது பங்கு மிக அதிகம் என பிரதமர் பதிவிட்டுள்ளார்.


அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it