1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சா் துரைக்கண்ணுக்கு கொரோனா தொற்று.. அதிர்ச்சியில் தொண்டர்கள் !

அமைச்சா் துரைக்கண்ணுக்கு கொரோனா தொற்று.. அதிர்ச்சியில் தொண்டர்கள் !


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயியம்மாள் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவிக்க வேளாண் துறை அமைச்சா் துரைக்கண்ணு கடந்த 13ஆம் தேதி சென்னையிலிருந்து சேலத்துக்குப் புறப்பட்டார்.

திண்டிவனம் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அமைச்சா் துரைக்கண்ணுக்கு கொரோனா தொற்று.. அதிர்ச்சியில் தொண்டர்கள் !

அங்கு அவருக்கு மருத்துவா்கள் முதல்கட்ட சிகிச்சை அளித்தனா். பின்னா், உயா் சிகிச்சை தேவைப்பட்டதால் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவா் அழைத்து வரப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடா்ந்து அமைச்சருக்கு மருத்துவா்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனா்.

அமைச்சர் துரைகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

newstm.in

Trending News

Latest News

You May Like