மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ - க்கு கொரோனா தொற்று !!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரசின் தாக்கத்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் கடலூரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அவர், சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டு வருவதாகவும், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறவுள்ளதாகவும் அம்மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் இதுவரை 13 எம்.எல்.ஏ.களுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
Newstm.in