நடிகர் பிரித்விராஜூக்கு கொரோனா தொற்று !

பிரபல திரைப்பட நடிகர் பிரித்விராஜூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலையாள திரைப்பட உலகில் தனக்கென ஒரு இடத்தை பெற்றவர் நடிகர் பிரித்விராஜ். இவர் தமிழில் கனா கண்டேன் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். பின்னர், பல்வேறு படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில், ஜன கன மன என்ற படத்திற்கான படப்பிடிப்பில் அவர் கடந்த 7-ம் தேதியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்தே படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டோம்.
ஆனால், இறுதி நாள் பரிசோதனையில் எனக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால், நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன் என தெரிவித்துள்ளார். இதேபோன்று அப்படத்தின் இயக்குநர் டிஜோ ஜோஸ் அந்தோணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.