#BREAKING:- தமிழக செய்தித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி..!
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருப்பவர் மு.பெ.சாமிநாதன். இவருக்கு லேசான அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.
பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.