சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்..!

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்..!

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்..!
X

சென்னையில் இதுவரை மொத்தம் 373 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 1629 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 373 பேர்  பாதிக்கப்பட்ட நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 86-இல் இருந்து 103-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் கடந்த வாரம் வரை மணலி மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் மட்டும் தொற்று இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது அவ்விரு மண்டலங்களிலும் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அதன்படி மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:- 

மண்டலம் - மொத்தம் - உயிரிழந்தவர்கள் - குணமடைந்தவர்கள்

 • திருவொற்றியூர் -          13 - 0 - 2
 • மணலி -                             1 - 0 - 0
 • மாதவரம் -                         3 - 0 - 3
 • தண்டையார்பேட்டை - 46 - 1 - 4
 • ராயபுரம் -                        117 - 5 - 28
 • திருவிக நகர் -                  45 - 1 - 19
 • அம்பத்தூர் -                        1 - 0 - 0
 • அண்ணாநகர் -                 32 - 1 - 10
 • தேனாம்பேட்டை -          44 - 0 - 7
 • கோடம்பாக்கம் -             36 - 0 - 16
 • வளசரவாக்கம் -             10 - 0 - 4
 • ஆலந்தூர் -                        7 - 0 - 2
 • அடையார் -                      7 - 0 - 4
 • பெருங்குடி  -                    8 - 0 - 3
 • சோழிங்கநல்லூர் -        2 - 0 - 1
   

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 66.13% பேரும், பெண்கள் 33.87% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் வயது வித்தியாசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-

வயது = பாதித்தோர் எண்ணிக்கை

 • 0-9         = 4
 • 10-19     = 25
 • 20-29     = 75
 • 30-39     = 82
 • 40-49     = 64
 • 50-59     = 64
 • 60-69     = 34
 • 70-79     = 17
 • 80          = 7

இது தவிர, சென்னையில் வீடு வீடாக மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா அறிகுறிகள் பரிசோதனையில் இதுவரை 19 லட்சத்து 42 ஆயிரத்து 374 பேரிடம் முழுமையாக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதில்,787 நபருக்கு அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும், விரைவில் இப்பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு தொற்று உள்ளவர்கள் அனைவரும் கண்டறியப் படுவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in 

Next Story
Share it