மே மாத மத்தியில் கொரோனாவால் இந்தியாவில் இவ்வளவு பாதிப்பா.? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு..!

மே மாத மத்தியில் கொரோனாவால் இந்தியாவில் இவ்வளவு பாதிப்பா.? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு..!

மே மாத மத்தியில் கொரோனாவால் இந்தியாவில் இவ்வளவு பாதிப்பா.? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு..!
X

இந்தியாவில் மே மாத மத்தியில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 38 ஆயிரமாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சையை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் கொரோனாபால் 23,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானனோர் எண்ணிக்கை 681-லிருந்து 718ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு ரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,427-ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே மே 3ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வருகிற 27ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பிறகு ஊரடங்கை நீட்டிக்கவே வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சிக் கழகம், இந்திய அறிவியல் நிறுவனம், மும்பையில் உள்ள ஐஐடி மற்றும் புனேவில் உள்ள ராணுவத்திற்கான மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மே மாதத்தில் எத்தகைய நிலையில் இருக்கும் என்கிற கணிப்பை வெளியிட்டுள்ளன.

அதில் மே மாத மத்தியில் 38,220 பேர் கொரோனாவால் பலியாகலாம் என்றும் 30 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சுமார் 70 ஆயிரம் பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக நிலையில் இருக்கலாம் எனவும் அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தாலி மற்றும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் பன்மடங்கு அதிகரித்ததன் விகிதாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புள்ளி விவரம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in 

Next Story
Share it