1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு.. சென்னையும் மிக மோசம்.. உஷார் மக்களே

தமிழகத்தில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு.. சென்னையும் மிக மோசம்.. உஷார் மக்களே


தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் அதிகாரிகளும் மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு.. சென்னையும் மிக மோசம்.. உஷார் மக்களே

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 27,49,534 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை, கோவையில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 36,784 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 611 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 27,04,410 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் மிக மிக குறைவாக இருக்கிறது.

8,340 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மேலும் 682 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் 75 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 168 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 35 பேருக்கும், மதுரையில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 31 பேருக்கும், திருவள்ளூரில் 70 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு.. சென்னையும் மிக மோசம்.. உஷார் மக்களே

தினசரி கொரோனா பாதிப்பு 500 என்ற அளவில் இருந்து இரண்டே நாட்களில் அதிகரடியாக அதிகரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஒமைக்ரானும் பரவி வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like