ஒரே பள்ளியை சேர்ந்த 85 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!!

ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலம் நைனித்தால் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்தியாலயா பள்ளியில் 85 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல், பள்ளியில் பணி புரியும் ஊழியர்கள் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களில் 70 சதவீதம் பேருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் மூக்கடைப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதித்துள்ள மாணவர்கள், தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த பள்ளி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.