காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா ? தனிமையில் சிகிச்சை !!

தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,47,324லிருந்து 1,51,820ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று 1,291பேர் கொரோனாவால் பாதிப்பு. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 79,698ல் இருந்து 80,961ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2167ஆக அதிகரிப்பு. இன்று ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,310ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோவை ஆட்சியர் ராசாமணியை தொடர்ந்து காஞ்சிபுரம் ஆட்சியருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் பொன்னையா கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Newstm.in