#BREAKING: கமல்ஹாசனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி..!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதை, தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.