பேருந்தில் பயணித்த கணவன் - மனைவிக்கு கொரோனா.. பாதி வழியில் இறக்கிவிட்டதால் பதற்றம் !

பேருந்தில் பயணித்த கணவன் - மனைவிக்கு கொரோனா.. பாதி வழியில் இறக்கிவிட்டதால் பதற்றம் !

பேருந்தில் பயணித்த கணவன் - மனைவிக்கு கொரோனா.. பாதி வழியில் இறக்கிவிட்டதால் பதற்றம் !
X

கணவன் - மனைவிக்கு கொரோனோ தொற்று உறுதி என தொலைபேசி வந்ததால் அவர்களுடன் பேருந்தில் பயணித்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் ஆபத்தானபுரத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்தனர். பின்னர் வீட்டிறக்கு திரும்பிய அவர்கள் இருவரும் பண்ருட்டி அருகே காடாம்புலியூருக்கு பகுதிக்கு பேருந்தில் பயணம் செய்தனர்.

கொரோனா சோதனை எடுத்துக்கொண்டதால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியும், அவர்கள் பேருந்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், மருத்துவ பரிசோதனையில் கணவன், மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து அவர்களை செல்போனில் அழைத்த சுகாதாரத்துறையினர், கொரோனா இருப்பதை தம்பதியிடம் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்சசி அடைந்த அவர்கள் தொலைபேசியினை நடத்துனரிடம் கொடுத்துள்ளனர்.

சுகாதாரத்துறை ஊழியர்கள் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி தகவலை தெரிவித்துள்ளார். எனவே அவர்களை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுங்கள் என்று கூறியுள்ளனர் .

இதையடுத்து அதிர்சசி அடைந்த ஓட்டுநர் பேருந்தை நெய்வேலி இந்திரா நகர் பகுதியல் அவர்களை கீழே இறக்கிவிட்டனர். பேருந்தில் இருந்த சக பயணிகள், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அனைவரும் சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு சென்று விட்டனர். அதன்பிறகு பேருந்தை பணிமனைக்கு எடுத்துச் சென்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

newstm.in 

Next Story
Share it