துணிக்கடை உரிமையாளருக்கு கொரோனா! அச்சத்தில் மக்கள்!!

திருவள்ளூரில் துணிக்கடை உரிமையாளருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு வேலை பார்த்தவர்கள், துணி வாங்கியவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.
பேரம்பாக்கம் பகுதியில் உள்ள சீமாட்டி துணிக்கடை உரிமையாளருக்கு கொரானா தொற்று உறுதியானதால் அவரது குடும்பத்தினருக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த கடையில் வேலை பார்த்தவர்களுக்கு பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார். மேலும், கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை அந்த கடையில் துணி எடுத்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in