கார் ஓட்டுநருக்கு கொரோனா... பாதி வழியில் வேறு காருக்கு மாறிய அமைச்சர்!

கார் ஓட்டுநருக்கு கொரோனா உறுதியானதால் தமிழக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பாதி வழியிலேயே இறங்கிய சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க தனிமனித இடைவெளி என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். வைரஸ் தொற்று ஏற்பட்டவரிடம் இருந்து மற்றவர்க விலகியிருக்க வேண்டும். தமிழக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆரணிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டுநருக்கு கொரோனா என தகவல் வந்துள்ளது. இதையடுத்து காரில் இருந்து பாதி வழியிலேயே அவர் இறங்கினார். பின்னர் அமைச்சர் வேறு காரில் சென்றார். கொரோனா பாதித்த கார் ஓட்டுநர் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
newstm.in