மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா.. தொண்டர்கள் அதிர்ச்சி !

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ., சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட சிந்தகம்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்த இவர், கட்சி கூட்டங்களிலும், பூமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் வந்தது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
newstm.in