கொரோனா அச்சம் !! தாய் , மகனை ஊருக்குள் அனுமதிக்காததால் நேர்ந்த கொடூரம்..

கொரோனா அச்சம் !! தாய் , மகனை ஊருக்குள் அனுமதிக்காததால் நேர்ந்த கொடூரம்..

கொரோனா அச்சம் !! தாய் , மகனை ஊருக்குள் அனுமதிக்காததால் நேர்ந்த கொடூரம்..
X

தெலுங்கானாவின் கமரெட்டி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணும் அவரது மகனும் ஊர் மக்கள் அனுமதிக்காததால் மூன்று நாட்கள் பேருந்து நிலையத்தில் தங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் ஊருக்குள் நுழைய அனுமதிக்க மறுத்தனர்.

கமரெட்டி மாவட்டத்தில் பிக்கனூர் ‘மண்டல்’ ஜங்கம்பள்ளி கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த பெண்ணும் அவரது மகனும் ஹைதராபாத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட அவரது மகள் காந்தி மருத்துவமனையில் ஒரு குழந்தையை பிரசவித்தார்.

ஜூன் 29 அன்று அவர்கள் கிராமத்திற்கு வந்தபோது, கொரோனா சோதனைகளுக்குப் பிறகே ஊருக்குள் வர வேண்டும் என்று கிராமவாசிகள் வலியுறுத்தினர். தாய் மற்றும் மகன் தங்களை அனுமதிக்குமாறு கிராம மக்களிடம் கெஞ்சினாலும், இரண்டு வாரங்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வாழ முன்வந்தாலும், கிராமவாசிகள் சோதனை செய்தபிறகே ஊருக்குள் வரவேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தனர்.

இதனால் அவர்கள் இருவரும் மூன்று நாட்களை பேருந்து நிலையத்தில் கழிக்க வேண்டியிருந்தது. கொரோனா சோதனைக்கான மாதிரியை வழங்க அவர்கள் ஜூன் 30 அன்று கமரெட்டி மருத்துவமனைக்குச் சென்றனர்.

ஆனால் அதிகாரிகள் மறுநாள் வரும்படி கேட்டுக் கொண்டனர். மூன்றாம் நாள், சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு, கிராமத்து மக்களை சமாதானப்படுத்தி, தாயையும் மகனையும் அரசு நடத்தும் பள்ளி கட்டிடத்தில் தங்க அனுமதிதார்கள்.

இருவரின் சோதனை முடிவுகள் ஓரிரு நாட்களில் எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் மாதம் வேறொரு கிராமத்தைச் சேர்ந்த தனது கர்ப்பிணி மகள் தன்னைப் பார்க்க வந்ததாகவும் , ஆனால் ஊரடங்கால் வெளியிலேயே சிக்கித் தவித்ததாகவும் அந்தப் பெண் கூறினார்.

அவருக்கு ஜூன் 26 அன்று பிரசவ வலி உண்டானதால் கமரெட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால், மருத்துவமனை அதிகாரிகள் அவரை ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்தப் பெண் தனது மகனுடன் மகளை ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Newstm.in

Next Story
Share it