பதறித் துடித்த எடப்பாடி பழனிசாமி! திகிலில் மு.க.ஸ்டாலின்!

"கொடிய கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த பின்பு தமிழக மக்கள் அனைவருக்கும் அந்த மருந்து இலவசமாக செலுத்தப்படும்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒற்றை வரியில் அறிவித்திருந்தார்.
மத்தியில் ஆளும் பாஜகவின் அரசியல் துணையுடன், தமிழகத்தில் தனி ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என அதிமுகவில் முழக்கம் எழுந்த போது, அதற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பெரிய தடைக்கல் போட்டார்.
மனிதர் கொதித்து எழுந்து, நாலா திசைகளிலும் அரசியல் காய் நகர்த்தி, தானே முதல்வர் வேட்பாளர் என, ஓ.பன்னீர்செல்வம் வாயாலே சொல்ல வைத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆகும் செயலில் எடப்பாடியார் காய் நகர்த்தி வருகிறார்.
மக்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு பிழைப்புக்கே வழி இல்லாமலும், ஒரு வேளை சோத்துக்கே தவித்தும் வந்த நிலையில், மத்திய அரசும், மாநில அரசும், தக்க நேரத்தில் தேவையான உதவிகளை வழங்கவில்லை என்ற ஆதங்கமும், கோபமும் ஏழை, எளிய அடித்தட்டு மக்களிடம் நிறையவே இருந்தது.
இந்த நிலையில், மக்களுக்கு நிவாரண உதவி என பல்வேறு திசைகளில் முனைப்பு காட்டிய திமுக மக்களிடம் ஓரளவு மார்க் எடுத்தது. எப்படியும் ஆட்சி அதிகாரம் நமக்குத்தான் என திமுக கோட்டை கட்டி கனவு கண்டு கொண்டு இருந்தது.
இந்த நிலையில், "பீகார் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தால், மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசம்" என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார்.இதனையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்" என ஒரே போடாக போட்டார்.
இதனால், அரசியல் பார்வையாளர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும் ஏன் இந்த அவசர கோலம், கொஞ்சம் மெதுவாக, இன்னும் விரிவாக சொல்லி இருக்கலாமே என நினைத்தபோது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது எடப்பாடியாரின் அவரசம்.
எடப்பாடியாரின் அவசரத்திற்கு காரணம் குறித்து அரசியல் பார்வையாளர்களிடம் கேட்டபோது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்த போது, அவருக்கு "அரசு மரியாதை" வழங்க வேண்டும் என அறிக்கை விடுத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஸ்கோர் செய்து விட்டார். அவரது இந்த அறிவிப்பு, மக்களிடமும், திரையுலகினரிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
அதுபோல, கொரோனா தடுப்பூசி மருந்து விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் ஸ்கோர் செய்துவிடக்கூடாது என அவருக்கு முன்பே இந்த அறிவிப்பை வெளியிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கின்றனர்.
எடப்பாடியாரின் இந்த அதிரடி மூவ்மெண்ட் அறிந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கொஞ்சம் மெர்சலாகிப் போனார்களாம்.
பலே... பலே.. சாமி... சாரிங்க... எடப்பாடி பழனிசாமி...!