கொரோனா கஷ்டம்... சொத்து வரி கட்ட முடியல..! மாநகராட்சிக்கு எதிராக ரஜினி மனு!
கொரோனா கஷ்டம்... சொத்து வரி கட்ட முடியல..! மாநகராட்சிக்கு எதிராக ரஜினி மனு!

சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிராக ரஜினி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 6 மாத காலமாக தமிழகம் முழுவதும் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது.
தற்போது, தளர்வுகள் அடிப்படையில் திருமண மண்டபங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நடிகர் ரஜினிக்கு சொந்தமாக உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி கோரியுள்ளது.
ஆனால், ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாக இருந்ததாகவும், எனவே, சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என ரஜினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொது முடக்கம் ஏழை, எளிய மக்களை மட்டும் அல்ல சூப்பர் ஸ்டார் ரஜினியையும் விட்டுவைக்கவில்லை போலும்.
newstm.in