மேலும் ஒரு பெண் திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி !!
மேலும் ஒரு பெண் திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி !!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதி பெண் திமுக சட்டமன்ற உறுப்பினர் சீதாபதி கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து எம்எம்ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில், எம்எல்ஏ சீதாபதி மற்றும் அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகியோருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து எம்எல்ஏ சீதாபதி மற்றும் அவரது கணவர் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரத்தில் ஏற்கனவே செஞ்சி திமுக எம்.எல்.ஏ மஸ்தான், வானூர் தொகுதி எம்.எல்.ஏ சக்கரபாணி கொரனோ தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்நிலையில் மூன்றாவதாக திண்டிவனம் எம்.எல்.ஏ கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 3 எம் எல் ஏக்கள் கொரனோ தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in