1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  86,000 -த்தை கடந்தது !! மொத்த பலி எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  86,000 -த்தை கடந்தது !! மொத்த பலி எண்ணிக்கை


தமிழகத்தில் இன்று 3,949 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 82,275லிருந்து 86,224ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 2167பேர் கொரோனாவால் பாதிப்பு.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 53,780ல் இருந்து 55,969ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் 62 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,141ஆக அதிகரிப்பு.

இன்று ஒரே நாளில் 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 47,759ஆக அதிகரிப்பு. செங்கல்பட்டில் 187 , திருவள்ளூர் 154 , கிருஷ்ணகிரி 21 , மதுரை 303 , நாகை 11 ,

திருப்பத்தூர் 17 , திருவண்ணாமலை 41 , திருவாரூர் 15 , காஞ்சிபுரம் 75 , கோவை 65 , கடலூர் 26 , நீலகிரி 14 , ராமநாதபுரம் 61 , புதுக்கோட்டை 27 , தூத்துக்குடி 37 , நெல்லை7 , திருப்பத்தூர் 10 என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like