கொரோனா கொடூரம்! வாணியம்பாடி அருகே இளைஞர் தற்கொலை!

வாணியம்பாடி அருகே கடன் தொல்லையால் இளைஞர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாராபாபட்டு கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி (25) என்பவர் கடந்த அக்டோபர் 21-ம் தேதி தி சென்னை – பெங்களுரூ இடையிலான ரயில் பாதையில் வாணியம்பாடி வழியாகச் செல்லும் பாதையில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அவரது உடலை கைப்பற்றிய இரயில்வே காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் ஒருவரிடம், தனது வீட்டை அடகு வைத்து 2018 -ம் ஆண்டு 1.25 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மாதம் 5 ஆயிரம் ரூபாய் வட்டி, கட்டிவந்துள்ளார்.கொரோனாவால் வேலை இழப்பு, வருமானம் குறைவு காரணமாமாக சிரஞ்சீவியால் கடன் தொகையை சரிவர செலுத்தமுடியவில்லை.
இதனால், சிரஞ்சீவி அடமானம் வைத்த வீட்டை பைனானன்ஸியர் அபகரிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த சீரஞ்சீவி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் என தெரிய வந்துள்ளது. சீரஞ்சிவி தற்கொலைக்கு காரணமான பைனான்ஸியரை போலீசார் தேடி வருகின்றனர்.