1. Home
  2. தமிழ்நாடு

அமேசான் ஊழியர்கள் 20,000 பேருக்கு கொரோனா… அப்போ ஆர்டர் பண்ணுனவங்க கதி!?

அமேசான் ஊழியர்கள் 20,000 பேருக்கு கொரோனா… அப்போ ஆர்டர் பண்ணுனவங்க கதி!?


தங்கள் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 20,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நிறுவனங்களும் முழுமூச்சில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் அமேசான் நிறுவன ஊழியர்களில் 20,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மொத்த அமெரிக்க தொகையில் குறைவுதான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், அதனை வெளியிட வேண்டும் என்றும், அது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அமெரிக்காவில் 71 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like