1. Home
  2. தமிழ்நாடு

சாலையோரம் மலைபோல கொட்டப்படும் கொத்தமல்லி- விவசாயிகள் வேதனை..!!

coriander
கொத்தமல்லிக்கு உரிய விலையும் விற்பனையும் இல்லாத காரணத்தால் ஓசூரில் சாலையோரம் மலையளவுக்கு கொத்தமல்லி இலைகள் கொட்டப்படுவது வேதனையை அளித்துள்ளது.

ஓசூரில் இருக்கும் சூளகிரி, கெலமங்கலம், மத்திகிரி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கீரை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை நடவு செய்து சாகுபடி செய்து வருகின்றன. இப்பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் பரப்பளவில் கொத்தமல்லி இலைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

ஆண்டு முழுவதும் வரவேற்பு இருக்கக்கூடிய தாவரம் தான் கொத்தமல்லி. எல்லாவிதமான சமையலுக்கும் இதை பயன்படுத்தலாம். சந்தைக்கான வரத்து மற்றும் நுகர்வுத் தேவையின் அடிப்படையில் தான் கொத்தமல்லிக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஆரம்பமாக ரூ. 5 முதல் ரூ. 25 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நடந்த ஒருவாரமாக ஓசூரில் இருக்கும் பிரபல சந்தைகளில் கொத்தமல்லியின் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் உரிய விலைக் கிடைக்காததால் பல கட்டு கொத்தமல்லி இலைகளை விவசாயிகள் சூளகிரி குப்பை மேட்டில் கொட்டிவிட்டுச் சென்றனர். 

இதுதொடர்பாக பேசிய விவசாயி, கடந்த மாதம் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டது. அதனால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பலர் கொத்தமல்லி பயிரிட்டோம். கடந்த வாரம் திடீரென பெய்த மழை காரணமாக கொத்தமல்லி விளைச்சல் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

அதன்மூலம் சந்தைக்கு கொத்தமல்லியின் வரத்து அதிகரித்து, விலை சரிந்துள்ளது. அதனால் அதை பலரும் சாலையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வேளான்மைத் துறையினர் சந்தை வாய்ப்பு மற்றும் சாகுபடி தொடர்பாக விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
 

Trending News

Latest News

You May Like