1. Home
  2. தமிழ்நாடு

மல்லி பூ கிலோ ரூ.2000-க்கு விற்பனை..!

1

பொதுவாக முகூர்த்தநாட்கள், பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகம் இருப்பதால் அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படும். வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும்.

இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும் நாளை முகூர்த்த நாளாகும். தீபாவளி மற்றும் முகூர்த்தநாளையொட்டி பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அவற்றின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் மல்லிகை கிலோ ரூ.500 முதல் 600 விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று 4 மடங்கு உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்பனையாகின.

இதேப்போல் முல்லை பூவும் கிலோ ரூ.2000-க்கு விற்கப்பட்டது. கனகாம்பரம் ரூ.1000, செவ்வந்தி ரூ.250, அரளி ரூ.300, ரோஜா ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் விலையும் அதிகமாகும்.

Trending News

Latest News

You May Like