1. Home
  2. தமிழ்நாடு

காவலர் கொலை: சிக்க வைத்த G-pay!

A

மலையரசன், காளையார்கோவில் தனிப்படை காவலராக பணிபுரிந்து வந்தார். அவர் சமீபத்தில் உயிரிழந்த தன் மனைவியின் மருத்துவ ஆவணங்களை வாங்க மதுரைக்கு வந்தபோது காணாமல் போனார். பின்னர், எரிந்த நிலையில் அவரது உடல் ஈச்சனேரி கண்மாய் அருகே கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மூவேந்திரனை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள முக்குளம் அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசன் (36). அவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக வேலை செய்து வந்தார். மலையரசனின் மனைவி பாண்டிசெல்வி கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மனைவியின் மருத்துவ ஆவணங்களை வாங்குவதற்காக மலையரசன் மதுரைக்கு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, மலையரசன் உடல் மதுரை சுற்றுச்சாலையில் ஈச்சனேரி கண்மாய் அருகே எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மூவேந்திரனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

திங்கள்கிழமை (இன்று) காலை, மூவேந்திரனை மதுரை அருகே போலீசார் சுட்டுப் பிடித்தனர். காயமடைந்த மூவேந்திரன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் விசாரணையின்போது ஜி-பே மூலம் பணம் அனுப்பப்பட்டது தெரிந்தது.

அதன் அடிப்படையில் மூவேந்திரனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனா். அப்போது அவர் போலீசார் ஆயுதங்களை கொண்டு தாக்க முயன்றதுடன் தப்பித்து ஓடி உள்ளாா. அந்த சமயத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனா். குற்றவாளி தாக்கியதில் காயமடைந்த திருமங்கலம் தனிப்படை உதவி ஆய்வாளர் மாரிக்கண்ணன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலையில் தொடர்புடையவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like