RBI - யின் நேரடி கட்டுப் பாட்டில் கூட்டுறவு வங்கிகள் !! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 மாநில கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அரசு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் மேற்பார்வை அதிகாரங்களின் கீழ் கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு உரையாற்றிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ; திட்டமிடப்பட்ட வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் இனி கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும் என்று கூறினார்.
முத்ரா யோஜனாவின் கீழ் ஷிஷு கடன் வகை கடன் வாங்குபவர்களுக்கு 2% வட்டி மானியம் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அவர் கூறினார். இதே போல் ஓபிசி வகுப்பில் துணை வகைப்படுத்தல் தொடர்பான பிரச்சினையை ஆறு மாதங்களுக்குள் , அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை ஆய்வு செய்ய அரசியலமைப்பின் 340’வது பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். அவரது இல்லம் 9, லோக் கல்யாண் மார்க்கில் இந்த சந்திப்பு கொரோனா வைரஸ் பாதிப்பின் மத்தியில் நடந்தது. இது ஜூன் 8’ஆம் தேதி தொடங்கிய அன்லாக் 1.0 ஐ மத்திய அரசு அறிவித்த பின்னர் நடைபெறும் முதல் மத்திய அமைச்சரவை கூட்டமாகும்.
Newstm.in