பெட்டி, படுக்கையுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பிய கூல் சுரேஷ்..!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 1ம்தேதியான ஞாயிறு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தற்போது ஐந்தாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். கடந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்தது.
அதன்படி கூல் சுரேஷ், வினுஷா, மாயா, சரவண விக்ரம், விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், அக்ஷயா, நிக்ஸன், ஜோவிகா, மணி ஆகியோர் நாமினேட் ஆகிருந்தார்கள். இப்படி இருக்க கடந்த வாரம் 5 Wild கார்டு போட்டியாளர்கள் நுழைந்து இருந்தார்கள். அதில் கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ் மற்றும் அன்னபாரதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள். 5 Wild Card போட்டியாளர்கல் நுழைந்ததால் பிக் பாஸில் 19 போட்டியாளராக மாறியது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் புதிய டாஸ்க் கொடுத்த வேளையில் அதில் கடுப்பான காரணத்தால் பிக்பாஸ் வீட்டிலிருந்து கூல் சுரேஷ் வெளியேறுவதாக சொல்லி பெட்டிப் படுக்கையுடன் கிளம்பிய காட்சிகள் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.
ப்ரோமோவில் பிரதீப் விளையாடிய விதம் அனைவர்க்கும் எரிச்சலை கொடுத்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் ‘ பிரதீப் சற்று கோபத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார். பிறகு வாக்கு வாதத்தில் பிரதீப் கூல் சுரேசை பார்த்து அவன் ஒரு சில்லறை என்று கூறுகிறார். உடனடியாக விஸ்ணு யாரை சொல்கிறாய் கூல் சுரேஷ் அண்ணனா? என்று கேட்கிறார்.
அதற்கு பிரதீப் ஆமா அவன் தான் சில்லறை பையன் என்று கூறினார். அதற்கு கூல் சுரேஷ் என்னையா சொன்ன என்று கத்தி கேட்கிறார் நீ சில்லறை பையன் தான் என பிரதீப் மீண்டும் கூறுகிறார். இதனால் உச்சகட்ட கோபம் அடைந்த கூல் சுரேஷ் செருப்பால அடிப்பேன் மரியாதை இல்லாமல் பேசாத என்று கூறுகிறார்.
இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் பெரும் வாக்கு வாதமே ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நிக்சன் அண்ணா விடுங்க என்று பிரதீப்பை பார்த்து சொல்ல நிக்சனை நெஞ்சில் கைவைத்து தள்ளி சென்று போனார். இதனால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் நீங்கள் விளையாடுவது தவறு என கூறினார்கள்.
அதைப்போல பெண் போட்டியாளர் ஒருவரும் இப்படி செய்யாதீங்க அண்ணா என்பது போல கூற பிரதீப் மிகவும் கோபத்துடன் உன்னுடைய வேலையை மட்டும் பார்த்துவிட்டு போமா என்று கூறுகிறார். இந்த ப்ரோமோ இன்று நடைபெறும் எபிசோடில் இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ப்ரோமோவை பார்த்த பலரும் தவறு என்று தெரிந்தும் “நான் அப்படித்தான் பேசுவேன், விளையாடுவேன்” என்று அதீத நம்பிக்கையுடன் ப்ரதீப் விளையாடும் விதம் நன்றாக இல்லை என்றும் இதுவரை ப்ரதீப்பின் விளையாட்டை நம்பியவர்களுக்கு நேற்றில் இருந்து அந்த நம்பிக்கை காணாமலே போய் விட்டது என்பதே உண்மை எனவும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், விடாமல் பிரதீப் கத்திக் கொண்டிருக்க, ’நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன்’ என கூல் சுரேஷ் பெட்டி படுக்கையோடு பிக் பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறும் வகையிலான பரபரப்பான புரோமோ வெளியாகி இருக்கிறது.