1. Home
  2. தமிழ்நாடு

குதிரையில் என்ட்ரி கொடுத்த கூல் சுரேஷ்..! இந்தியன் 2க்கு வணக்கத்த போடு...

1

28 ஆண்டுகளுக்கு முன்னால் உலகநாயகன் கமல்ஹாசன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இணைந்து உருவாக்கிய இந்தியன் படம் வெளியானது.அந்த காலத்திலேயே பிரம்மாண்ட செட்கள், கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் வெளியான இந்தப் படம் பெருவெற்றி வெற்றது.

 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக 28 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ளது இந்தியன் 2. லைகா ப்ரோஷக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் உடன், எஸ்ஜே சூர்யா, சித்தாத், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ்,பாபி சிம்ஹா என பல நட்சத்திர பட்டாளமே இணைந்து இருந்தது. இதனிடையே இடையே நடிகர் கமலஹாசனின் அரசியல் என்ட்ரி, படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து, கொரோனா என பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. ஒரு வழியாக படம் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கிறது.

இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகள் இன்று அதிகாலை ஒன்பது மணி முதல் தொடங்கின. இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்பட ரசிகர்களிடையே இந்தியன் 2 படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. கமலின் டைட்டில் கார்டு முதல், ஆக்‌ஷன், பாடல் காட்சிகள் என ஷங்கரின் பிரமாண்டமான உருவாக்கத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள். 

இந்நிலையில் சென்னையில் இந்தியன் 2 வெளியான தியேட்டரில் பிரபல காமெடி நடிகரான கூல் சுரேஷ் செய்த அலப்பறை தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.இந்தியன் 2 படத்திற்காக இந்தியன் தாத்தா கெட்டப் போட்டு குதிரையில் அமர்ந்து வந்தார் கூல் சுரேஷ்.

தொடர்ந்து செய்தியாளர்கள் அவரை பேட்டி எடுக்க, தாத்தா கதறவிட போறாரு என கூல் சுரேஷ் சொன்னார்.ஒவ்வொரு பெரிய படத்திற்கு அந்த படத்தின் கெட் அப் போட்டுச் சென்று கவனத்தைப் பெறும் கூல் சுரேஷ், இந்தியன் 2 படத்திற்கு சற்று வித்தியாசமாக சென்றுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like