சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய திட்டம்.. புதிய விதியை கொண்டுவருகிறது மத்திய அரசு

சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய திட்டம்.. புதிய விதியை கொண்டுவருகிறது மத்திய அரசு

சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய திட்டம்.. புதிய விதியை கொண்டுவருகிறது மத்திய அரசு
X

நம் அனைவரின் வீட்டிலுமே சமையல் எரிவாயு சிலிண்டர் இருக்கும். மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ நாம் சிலிண்டர் வாங்குவோம். சிலிண்டர் விலையும் 1000 ரூபாயை நெருங்கிவிட்டது. ஆனால் சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து வரும் மானியம் நமது சுமையை சற்று குறைக்கும். ஆனால் நிறையப் பேருக்கு சிலிண்டர் மானியம் வருவதே தெரியாது.

அனைத்து எல்பிஜி வாடிக்கையாளர்களுமே சந்தை விலையில் முதலில் சிலிண்டரை வாங்க வேண்டும். அதன் பின்னரே மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனிடைேய, நீங்கள் எல்பிஜி சிலிண்டர் மானியத்தை வாங்க திட்டமிட்டிருந்தாலோ அல்லது ஏற்கனவே வாடிக்கையாளராக இருந்தாலோ உங்களுக்காக தான் தற்போது முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. மத்திய அரசின் உஜ்ஜவால் யோஜனா திட்டத்தின் கீழ், எல்பிஜி மானியத் திட்டத்தில் மத்திய அரசு சில மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது.
india gas
அறிக்கைகளின்படி, பெட்ரோலிய அமைச்சகம் இரண்டு புதிய கட்டமைப்புகளுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. முன்னதாக பட்ஜெட்டில் ஒரு கோடி புதிய இணைப்புகள் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இப்போது, ​​மத்திய அரசு துறைகளின் சார்பாக முன்பணம் செலுத்தும் மாதிரிகளை மாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணக் கட்டுப்பாட்டு வட்டாரங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்பணம் செலுத்தும் நிறுவனம் ரூ.1600 மொத்தமாக வசூலிக்கும். தற்போது, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMC) முன்பணத் தொகையை EMI-களாக வசூலிக்கின்றன. அதன்படி மானியத் தொகையை வசூலிக்கலாம் என கருதப்பபடுகிறது.
india gas
அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்படுகிறது. வீட்டு சிலிண்டரின் விலை சுமார் ரூ.3200. இந்த தொகையை அரசு மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) செலுத்துகின்றன.

எல்பிஜி இணைப்புக்கு ஒருவர் எவ்வாறு பதிவு செய்யலாம்:

பதிவு செய்ய, நீங்கள் முதலில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள LPG விநியோகஸ்தரிடம் கொடுக்க வேண்டும்.
இந்த படிவத்தில், விண்ணப்பித்தாரரான பெண் தனது முழு முகவரி, ஜன்தன் வங்கி கணக்கு மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணையும் கொடுக்க வேண்டும்.

அதன்பின்னர் உரிய முறையில் ஆய்வு செய்து, நாட்டின் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தகுதியான பயனாளிக்கு எல்பிஜி இணைப்பை வழங்குகின்றன.

ஒரு நுகர்வோர் EMIஐத் தேர்வுசெய்தால், சிலிண்டரில் பெறப்பட்ட மானியத்திற்கு EMI தொகை சரிசெய்யப்படும்.


newstm.in

Next Story
Share it