1. Home
  2. தமிழ்நாடு

தொடரும் கன்வேயர் பெல்ட் மரணம்..! என்எல்சி நிலக்கரி சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளி பலி..!

1

கடலூர் மாவட்டம் வடலூர் சித்த நகரை சேர்ந்தவர் அம்மாவாசை மகன் குழந்தைவேல் (36). இவர் என்எல்சி சுரங்கம் 1ஏ-யில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று (ஆக.5) சுரங்கம் 1ஏ-யில் இரவு பணிக்கு சென்றுள்ளார்.

இன்று (ஆக.6 )காலை பணிக்கு வந்தவர்கள் பார்த்தபோது குழந்தைவேல் கன்வேயர் பெல்ட் அருகே டோசர் இயந்திரம் மோதி உயிரிழந்து கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்த நெய்வேலி நகர போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த ஜூலை மாதம் கூட என்எல்சி நிறுவனம் 2-வது சுரங்கம் நிலக்கரி வெட்டி எடுக்கும் கன்வெயர் பகுதியில் சொசைட்டி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அன்பழகன் என்பவர் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார் என்பது குறிப்பிடத்தக்கது 
 

Trending News

Latest News

You May Like