சிபிஎஸ்இ வினாத்தாளில் குடும்ப ஒழுக்கம் குறித்த கேள்வியால் சர்ச்சை!!
சிபிஎஸ்இ வினாத்தாளில் குடும்ப ஒழுக்கம் குறித்த கேள்வியால் சர்ச்சை!!

சி.பி.எஸ்.சி. 10ஆம் வகுப்பு தேர்வுத் தாளில் குடும்ப ஒழுக்கம் தொடர்பாக இடம்பெற்றுள்ள குறிப்பு மற்றும் கேள்வி குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.
காங்கிரசை சேர்ந்த லட்சுமி ராமச்சந்திரன் , அந்த கேள்வித்தாளின் பகுதியை வெளியிட்டு ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். முன்பெல்லாம் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்த நிலையில், தற்போது அவ்வாறு இல்லாததால் குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணியாளர்களிடம் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாக அதில் எழுதப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுகுறிப்பின் இறுதியில் அதற்கு தலைப்பிடுமாறு நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. அதில், குழந்தைகளின் ஒழுங்கீனத்துக்கு யார் பொறுப்பு, வீட்டில் ஒழுக்கம் சீர்கெட என்ன காரணம், வீட்டில் குழந்தைகள், பணியாளர்களுக்கான இடம், குழந்தைகள் உளவியல் என கேட்கப்பட்டுள்ளன.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 21ஆம் நூற்றாண்டில் ஆணும், பெண்ணும் சமம் என்று சொல்லும் சூழலில் இதுபோன்ற கற்பித்தல் பிற்போக்குத்தனமாது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். சிபிஎஸ்இ இதற்கு பதிலளிக்க வேண்டும் என லட்சுமி ராமச்சந்திரன் பதிவிட்டுள்ளார்.
This outrageously nonsensical reading passage appeared in the 10th CBSE board exam paper today. What are we teaching our children? CBSE has to give an explanation and tender an apology for inflicting our children with this.@Jairam_Ramesh @jothims @kavithamurali
— Lakshmi Ramachandran (@laksr_tn) December 11, 2021
Extracts follow+ pic.twitter.com/QInuqaBAaE
newstm.in