1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதியில் தேவஸ்தான அறிவிப்பால் வெடிக்கும் சர்ச்சை..!

11

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஊழியர்களை வழங்கும் ஸ்ரீ லட்சுமி ஸ்ரீனிவாசா மேன் பவர் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு சர்ச்சையாகியுள்ளது.

திருப்பதி கோயிலில் லட்டு தயாரிப்பதற்கான ஆட்கள் வேண்டி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருமலை பிரசாதம் தயாரிப்பதில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவது நியாயமில்லை என்று இடதுசாரித் தலைவர்கள் வீடியோ வெளியிட்டதால் இப்பிரச்சனை பெரிதாகியுள்ளது.

திருப்பதி சிஐடியு மாவட்ட பொதுச்செயலாளர் கண்டரபு முரளி, திருமலையில் பிரசாதம் தயாரிப்பதில் சாதி பாகுபாடு இருப்பது பொருத்தமற்றது என்றும், அவர்களின் அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருமலை கோவிலில் உள்ள பொதுவில் பிரசாதம் தயாரிப்பதற்கு ஸ்ரீவைஷ்ணவ பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டிருப்பது ஆட்சேபனைக்குரியது என்றார்.

Trending News

Latest News

You May Like