தவெக வெளியிட்ட அணிகள் பட்டியலால் கிளம்பிய சர்ச்சை..! இன்னும் எத்தனை ஆண்டுகள் தாண்டா இழிவை சுமக்க வேண்டும்?

தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு அணிகள் குறித்த பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. விஜய் கையெழுத்துடன் இந்த பட்டியலில் 'குழந்தைகள் அணி'யும் இடம் பெற்றிருந்தது பேசுபொருளானது.
அத்துடன் 'திருநங்கைகள் அணி'யும் தவெகவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் திருநங்கைகள் அணிக்கு விஜய் வெளியிட்ட பட்டியலில் ஒதுக்கப்பட்ட வரிசை எண் 9. இதுதான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. காலம் காலமாக திருநங்கைகளை '9' என இழிவாக அழைப்பது நீடித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் திருநங்கைகள் என மனிதநேயத்துடன் மனிதர்களாக மதித்து அழைக்கப்படுகின்றனர். தற்போது விஜய் வெளியிட்ட பட்டியலில் தெரிந்தோ தெரியாமலோ திருநங்கைகள் அணிக்கான இடம் 9 என ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாகிவிட்டது.
இது தொடர்பாக திருநங்கைகள் செயற்பாட்டாளர் Living Smile தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த "9" என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்? நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விசயம். அதை 9ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா! இதையும் நாங்களே தான் மாரிலும், வயித்திலும் அடித்து கேட்க வேண்டும். தமிழ்கூறும் அறிவுஜீவுகள் கொஞ்சம் சேர்ந்து நில்லுங்க ப்ளீஸ்! இவ்வாறு Living Smile தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிலர் கொடுத்த விளக்கத்துக்கும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டும் வருகின்றன.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த “9” என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்? நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விசயம். அதை 9ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா!… pic.twitter.com/QK7ZnGti5z
— Living Smile (@livingsmile) February 11, 2025